இரு நாட்டு அதிபர்களும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவான் எல்லைப்பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்புவதாக பார்க்க வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் இந்த செயல்பாடுகளானது கடந்த 72 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான மற்றும் பதட்டமான சூழ்நிலையாக உருவாகியுள்ளதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த விவகாரத்தில் தீவிர முனைப்பு காட்டி வரும் அமெரிக்கா தற்போது சர்வதேச அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் காணொளி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் தைவான் விவகாரம் போன்ற பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.