சீன அரசு, அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சீன நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் காய்கறி போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விற்பனைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே அரசு அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் இவ்வாறான அறிவிப்பிற்கு பின் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் அனைவரும் அதிகமாக பொருட்களை வாங்கி வீடுகளில் குவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.