Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உறுதுணையாக நிற்கும் சீனா..!!

புல்வாமா தாக்குதல் காரணமாக உலக நாடுகள்  கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சீனா, பாகிஸ்தானுக்கு என்றும் உறுதுணையாக  இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது. 

சீனநாட்டின்  துணை அதிபர் வாங் குவிசானுடன் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இவர்கள் இருவரும் சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது    காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில்  இந்த பழைய கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், புதிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் சீனா தரப்பில் கூறப்பட்டது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தைத் தணிப்பதற்க்காக  சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி நன்றி தெரிவித்தார்.

Image result for At a joint press conference on Tuesday after concluding the first Pakistan-China foreign ministerial dialogue, visiting Pakistani foreign minister, Shah Mahmood Qureshi said that the world should make a “new assessment” of the situation in Kashmir, especially after the Pulwama attack.

இதற்கிடையில் தீவிரவாத இயக்கங்களுக்கு சீனா ஆதறவு தருகிறதா என  உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும், அதனை ஒரு போதும்  ஏற்கவில்லை என சீனா விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் கொடூரமானது என்றும், தீவிரவாத்திற்கு எதிராக சீனா  போராட உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |