Categories
உலக செய்திகள்

கொரோனா எங்கு தோன்றியது..? சீனா-அமெரிக்கா இடையே மோதல்..!!

கொரோனா எங்கு உருவானது என்பது தொடர்பில் அறிக்கை வெளியிட அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதை சீனா விமர்சித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பினர் கொரோனா தோன்றியது தொடர்பில் ஆய்வு செய்ய  சீனாவின் வூஹான் நகரம் சென்றனர். இதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், வூஹான் நகரின் ஆய்வகத்தில் கொரோனா தோன்றியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அமெரிக்கா கண்டுபிடிக்காத ஆதாரங்கள் இன்னும் இருக்கிறது என்று கூறியுள்ளது. மேலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் கொரோனா தோற்றம் தொடர்பில் விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க பிரபல ஊடகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் வூஹான் ஆய்வகத்தில் பணிபுரிந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உளவுத்துறை வெளியிட்டிருந்த தகவலை குறிப்பிட்டு கூறியிருக்கிறது. மேலும் இது குறித்து முழு தகவல்களை பெறுவதற்கு அதிபர் ஜோபைடன், அமெரிக்க உளவுத்துறைக்கு 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Zhao Lijian, வைரஸின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது கடினமானது. தற்போது அமெரிக்கா, புலனாய்வுத் துறையை ஆய்வு முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்திருக்கிறது. இதில் அமெரிக்கா உண்மையை அறிந்து கொள்வதற்கு விரும்பவில்லை.

விஞ்ஞானத்தின் ஆய்வுகளையும் விரும்பவில்லை. இது அரசியல் விளையாட்டு போன்றது. அடுத்தவர்கள் மீது பழியை போட்டுவிட்டு தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |