அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது.
இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் தங்கள் நாட்டிற்கு இடையே மோதல் இருப்பதால், ஜி-20 மாநாட்டை அங்கு நடத்தக்கூடாது என்று கூறியது. இதனைத்தொடர்ந்து தற்போது, சீன அரசும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
சீன நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜாவ் லிஜியன் தெரிவித்ததாவது. ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் சீன நாட்டின் நிலைப்பாடு நிலையானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கிறது. அது, இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையேயான விவகாரம்.
இரண்டு நாடுகளும் தான் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும். தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் நிலையை மேலும் சிக்கலாக்குவதை இரண்டு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.