Categories
உலக செய்திகள்

பேச்சுவார்தையால் மட்டுமே தீர்க்க முடியும்…. உக்ரைன் பிரச்சனை குறித்து சீனா கருத்து…!!!

சீன அரசு, உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கனுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் பிரச்சனை சிக்கலாக இருக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது.

உக்ரைன் நாட்டின் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். நிலைமையை சரி செய்வதற்காகவும், அரசியல் தீர்வுகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தையும் சீனா ஆதரிக்கும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |