சீன அரசாங்கம் ராய் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸிற்கு சரியான நேரத்தில் நிதியாக டன் கணக்கில் அரிசியும், கோடி கோடியாக பணமும் வழங்கியுள்ளது.
பிலிப்பைன்ஸை ராய் என்னும் புயல் புரட்டிப் போட்டுள்ளது. இந்த புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 13,00,000 த்திற்கும் மேலான பொதுமக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் சீனா ராய் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக 4725 டன் கணக்கில் அரிசியை வழங்கியுள்ளது. மேலும் நிதி தொகையாக சுமார் 7 கோடியே 54 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்சின் சரக்கு மேலாண்மை மற்றும் தேசிய அமைப்பின் இயக்குனரான இம்மானுவேல் கூறியதாவது, சீனா தக்க சமயத்தில் தங்கள் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டிய நல்ல எண்ணத்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.