Categories
உலக செய்திகள்

இணையதளத்தில் எடுத்த ஏலம்… லாக்கரை பார்த்து அதிர்ந்து போன குடும்பம்… நியூசிலாந்தில் அதிர்ச்சி…!!

நியூசிலாந்தில் இணையதளத்தில் ஏலம் எடுத்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் ஒன்றுக்குள் இரு குழந்தைகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் ஒரு குடும்பம் இணையதளத்தில் கடந்த வாரத்தில் ஏலம் எடுத்திருக்கிறார்கள். அதன்பிறகு, அவர்கள் லாக்கரை பார்த்த போது, குழந்தைகள் இருவரின் உடல்கள் கிடந்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போன அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், இது பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் தெரிவித்ததாவது, அந்த குழந்தைகள் 10 வயதுக்கு குறைவானவர்கள். குழந்தைகளின் சடலங்கள் பல வருடங்களாக அந்த சூட்கேஸிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் யார்? என்பது அடையாளம் காணப்படவில்லை. இந்த குழந்தைகள் இறந்தது பற்றி அவர்களின் குடும்பத்தாருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். எனினும், இணையதளத்தின் வழியாக ஏலம் எடுத்த குடும்பத்தினருக்கு இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று காவல்துறையினர் கூறிவிட்டனர்.

Categories

Tech |