Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நீங்க தான் நாட்டுக்கு தேவை…! டிஜிபி பாராட்டை பெற்ற குட்டிஸ்… வியக்கும் செயலால் குவியும் உதவிகள்..!!

திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அந்த சாலையோரம் கழிவு நீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அங்கிருந்த விளம்பர பதாகையை கட்ட பயன்படுத்தும் கம்பியை எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது ஒரு பலகை ஒன்றை வைத்து தேவயானி மூடினார்.

அப்போது தனது அக்காள் மழையில் நனையாமல் இருப்பதற்காக அவரது தம்பி அவருக்கு குடை பிடித்தார். இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனையடுத்து சமூக அக்கறையுடன் செயல்பட்ட அக்குழந்தைகளை பாராட்டி அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தேவயானி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோரை நேரில் அழைத்து தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டினார். அதோடு பிறருக்கு எடுத்துக்காட்டாக சமூக பொறுப்புடன் செயல்பட்ட தேவயானி மற்றும் விக்னேஷிற்கு 2000 ரூபாயை பரிசாக வழங்கினார். மேலும் அந்த  குழந்தைகளின் கல்விக்கு எந்தவித உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகுமாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |