Categories
சினிமா தமிழ் சினிமா

சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம்…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்……!!!

சாய்பல்லவி தங்கையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் ”பிரேமம்” படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். இதனையடுத்து, தமிழ், தெலுங்கு என பல படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், நாகசைதன்யாவுடன் இவர் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில், இவரின் தங்கையும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதன்படி, ‘சித்திரை செவ்வானம்’ என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இதனால், சாய்பல்லவி தங்கையுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CW_nlBjhvb_/?utm_source=ig_embed&ig_rid=c34530d7-7174-4fd6-a605-bb4972f3fc13

Categories

Tech |