ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டரில் இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது அதிக வருத்தம் தரக்கூடிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனை எதிர்த்து பல தளங்கள் போராடி வருகின்றன. எனவே, அவ்வாறான தகவல்களை கண்டுபிடித்து நீக்குவதற்கான பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்பு இந்த பிரச்சனையில் பல வருடங்களாக ட்விட்டர் அதிக முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.