Categories
பல்சுவை

துள்ளி குதித்து விளையாடும் குழந்தைகள்…. துட்டுக்காக தொழிலாளி ஆக்கபடுவதேன்…?

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை பருவம் துள்ளிக் குதித்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் இனிய பருவம் ஆகும். ஆனால் அத்தகைய அருமையான குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று விளையாடி மகிழ்ச்சியுடன் இருக்காமல் வேலைக்கு செல்வது கொடுமையாகும்.

எனவே உலகமெங்கும் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு அனுப்பும் கூடாது என்பதை வலியுறுத்தி உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி அன்று குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐகிய நாடுகளில் ஒரு அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |