வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பதாங்கள் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரனேஷ் (வயது 8) என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து சக்திவேலுக்கு அண்ணாதுரை என்ற தந்தை இருக்கின்றார். இந்நிலையில் அண்ணாதுரையின் ஓட்டு வீடு இடிந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த இடிபாட்டில் அண்ணாதுரை மற்றும் தர்னேஷ் சிக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தரனேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் அண்ணாதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.