Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தாயின் அலட்சியம்” கோழி கறி சாப்பிட்ட….. 4 வயது சிறுவன் மரணம்…!!

கோவை அருகே கோழி கறி சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வசித்து வந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலைக்காக கோயம்புத்தூர் வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் கூலிவேலை செய்து வந்துள்ளார். அப்போது அவர் வசிக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணான பிங்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் கமலேஷ் என்ற 4 வயது மகனும் இருந்தான். இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட காமாட்சி-பிங்கி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வருவது வழக்கம். அந்த வகையில், சமீபகாலமாக அதிகமாக சண்டை ஏற்படவே, பிங்கி தனது கணவரான காமாட்சி சுந்தரத்தை விட்டு பிரிந்து தனது மகன்  கமலேஷை  கூட்டிக்கொண்டு தனது வடமாநில சொந்தமான லங்கேஸ்வரன் என்பவர் குடும்பத்தின்  அடைக்கலம் பெற்று அங்கே வசித்து வந்துள்ளார்.

நேற்றைய தினம் கோழிக்கறி லங்கேஸ்வரன் வந்த நிலையில், அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது பிங்கி தனது குழந்தை கமலேஷுக்கு சாப்பாடு ஊட்டியுள்ளார். அதில் முழு கோழிக் கறித் துண்டு இருப்பதைக் கூட பார்க்காமல் அலட்சியமாக அவர் உணவை ஊட்டியதால்,

கறித்துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சில மணி நேரத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்துள்ளார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவனது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து சிறுவனின் தந்தை காமாட்சி சுந்தரத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். மேலும் தனது இறந்த மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிறுவனின் உடலை தந்தையிடமே காவல்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிறுவனின்  உடலை காமாட்சி அவர் வசித்துவந்த தொண்டமுத்தூர் பகுதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தார். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |