ஜெர்மன் நாட்டில் மொத்தமாக குற்ற விகிதம் குறைந்து வரும் நிலையில் சிறுவர் ஆபாச படங்களும் சைபர் கிரைம் விநியோகமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் சிறுவர் ஆபாச பட விநியோகம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த 2020ம் வருடத்தை விட 2021 ஆம் வருடத்தில் 108.8% சிறுவர் ஆபாச பட விநியோகம் அதிகரித்திருக்கிறது. இது ஜெர்மனியின் வருடாந்திர குற்ற புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுபற்றி ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சரான நான்சி ஃபேசர் தெரிவித்திருப்பதாவது, பயங்கரமாக அதிகரித்திருக்கும் குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தனக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், மொத்தமாக ஜெர்மனி நாட்டில் கடந்த 2017-ஆம் வருடத்திலிருந்து குற்றங்கள் குறைந்திருக்கின்றன. வன்முறை குற்றங்கள் 6.8 சதவீதம் குறைந்திருக்கிறது.