பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் லாவண்யா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான லாவண்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் லாவண்யாவை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இளையராஜா மற்றும் மருத்துவ உதவியாளர் ஆனந்த் ஆகிய இருவர் லாவண்யாவுடன் இருந்துள்ளனர்.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் மதுரவாயல் பகுதியில் சென்றுள்ளது. அப்போது திடீரென அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவ வலி அதிகரித்துள்ளது. அதன் பின் ஆம்புலன்சிலேயே லாவண்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாய் சேய் இருவரையும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் தாய் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.