Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற சிறுவன்… சுறாமீனை தொட்டு பார்த்த போது நேர்ந்த கொடுமை…!!!

பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்ற ஒரு சிறுவன் சுறாமீன்களால் தாக்கப்பட்டு கடுமையாக காயங்களடைந்திருக்கிறார்.

பிரிட்டனை சேர்ந்த Finley Downer, என்ற எட்டு வயதுடைய சிறுவன் குடும்பத்தினருடன் பஹாமஸ் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அனுமதி சீட்டு பெற்று தன் சகோதரியுடன்  தண்ணீருக்குள் இறங்கிய சிறுவன் சுறாக்களை தொட்டு பார்த்து விளையாடியுள்ளார். அப்போது திடீரென்று சிறுவனை சுறாக்கள் தாக்க தொடங்கியது.

இதனால் பதறிய சிறுவன், ”காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று அலறியிருக்கிறார். உடனடியாக சிறுவனின் சகோதரி கையைப் பிடித்து இழுத்து சிறுவனை மீட்டுவிட்டார். அதன்பிறகு, சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனின் கால்கள் கடுமையாக பாதிக்கப்படைந்திருக்கிறது.

சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்பட்டிருக்கிறது. எனினும், அந்த காயங்களின் வடுக்கள் வாழ்நாள் முழுக்க நிரந்தரமாக சிறுவனின் கால்களில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. வழக்கமாக, nurse sharks மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்காது. எனினும் தகுந்த வழிகாட்டிகள் இல்லாத போது, சுறாமீன்கள் இருக்கும் இடத்தில் இறங்கிய சிறுவனுக்கு இவ்வாறு நிகழ்ந்து விட்டது என்று சுறாக்கள் மைய அமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |