Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்கள் கவனத்திற்கு : “மூளை வளர்ச்சி பாதிப்பு” குழந்தைகளுக்கு எச்சரிக்கை….!!

செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்க வாய்ப்புள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பண மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தொடர்ந்து தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை திறக்கப்படாமல், அதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது அவர்களின் உடல் நலத்தை பாதிக்கும் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால், உடல் செயல்பாடு குறைந்து, உடல் பருமன் அதிகரிக்கும். செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகள் மூளை வளர்ச்சி பாதிப்புக்கு அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

Categories

Tech |