தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9 இடங்களில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 3 , பாஜ 4 மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டகத்துல் முஸ்லிமின் கட்சி 1 இடங்களில் வென்றுள்ளது.
இதில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகராவ் மகள் கவிதா நிஜாமாபாத் தொகுதியில் தோல்வியடைந்துள்ளது. TRS கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த முறை நிஜாமாபாத் தொகுதி MP_யாக தேர்வாகிய போது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று அதிர்ச்சியடைந்த விவசாயிகள் 185 பேர் இவருக்கு எதிராக போட்டியிட்டு முதல்வரின் மகளை தோல்வியடைய வைத்துள்ளனர்.
நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அரவிந்த் 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் கவிதா தோற்கடித்துள்ளார். இங்கு பாஜக_விற்கு 4,80,584 வாக்குகளும், TRS வேட்பாளர் கவிதாவுக்கு 4,09,709 வாக்குகளும் கிடைத்துள்ளன. கவிதாவின் மீதான கோபத்தில் போட்டியிட்ட 185 மஞ்சள் மற்றும் பருப்பு விவசாயிகள் சுமார் 1,36,800 வாக்குகளைக் கைப்பற்றி முதல்வர் மகள் கவிதாவின் தோல்விக்கு அடித்தளமிட்டுள்ளனர்.