நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்த முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுனர். முன்னதாக மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.