தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிடிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷால் லத்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திர மாநிலத்திற்கு சென்றார். அப்போது நடிகர் விஷாலுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த விஷால் தான் அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும், தனக்கு சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நடிகர் விஷாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி நடிகர் விஷாலை சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக தேர்தலில் நிறுத்த போவதாக தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், வருகிற 27-ஆம் தேதி விஷால் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேச போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஷால் தனக்கு ஜெகன்மோகன் ரெட்டியை ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருந்ததால் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் விஷால் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.