தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று.
இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு முடிய 2 தினங்களே உள்ள நிலையில் நாளை ஆலோசனை ருத்துவ சிகிச்சை, நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில் நாளை மருத்துவ குழுவிடம் மீண்டும் ஆலோசனை நடத்த இருக்கிறார். நோயை கட்டுப்படுத்த சென்னையில் மட்டும் முழு ஊரடங்குக்கு விதிக்கலாமா? என்றும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஊரடங்கு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.