Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்: முதல்வர் விளக்கம்!

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு:

கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். சென்னையிலும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட கோயம்பேடு சந்தையே காரணமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

* ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கொரோனா எளிதாக பரவும் என்று அதிகாரிகள் மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
* கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர்.
* தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
* மேலும், பல்வேறு இடங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியவர்களால் கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* சென்னை பெருநகரில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சென்னையில் தெருக்கள் பல இடங்களில் குறுகலாக உள்ளன. எனவே பாதிப்பு அதிகமாக உள்ளது.
* கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். * மேலும், விவசாயிகளின் விளைபொருட்களை உரிய முறையில் விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விவசாயிகளின் விளைபொருட்களை விற்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
* சிறப்பு அதிகாரிகளை நியமித்து நோய் பரவலை கட்டுப்படுத்தி உள்ளோம்.
* இந்தியாவிலேயே அதிக பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* தொழிலாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கிறது.
* எந்த இடத்தில் உணவு பிரச்சினை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
* அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல என தெரிவித்துள்ளார்.
* இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது என அவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகள்:

* வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ரயில் கட்டணத்தை அரசே ஏற்று கொள்கிறது. அதேபோல, வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களையும் படிப்படியாக மாநிலத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
* மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* மேலும் அனாவசியமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் செல்லக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
* பேரூராட்சி,நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
* தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற லாரி ஓட்டுனர்கள், கிளினர்களை தனிமைப்படுத்தினால் நோய் தொற்றை தடுக்கலாம்.
* தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் செய்து தர வேண்டும்.
* விதிமுறைகளை மீறியதால் சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்களுக்கு பின் திறக்கலாம்.
* தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
* தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்து மாற்று இடங்களில் தொழில் நிறுவனங்கள் செயல்படலாம்.

Categories

Tech |