Categories
அரசியல்

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்… அச்சப்பட வேண்டாம்… முதல்வர் பழனிசாமி!

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும், அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்..

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். சாதி, மத இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம்.

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். அத்தியாசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள். கடும் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். சர்க்கரை, உயர் அழுத்தம் இருப்போர் தவறாமல் மருந்துகளை எடுக்க வேண்டும் என்றார்.

 

Categories

Tech |