கொரோனா நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என இந்த நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே தற்போது பச்சை மண்டலமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் ஒரு சில தொழில்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு அரசு ஒரு முடிவை எடுக்கும், அந்த முடிவை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்தலாம். அதே போல சிவப்பு பகுதி ஆரஞ்சு பகுதிகளாக மாற்றுவதற்கான ஒரு துரித நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு அறிவுறுத்தலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.