Categories
அரசியல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – முதல்வர் சொன்ன பதில்!

10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும்  அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின் தேர்வு  நடக்குமா? நடக்காதா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர்,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்குநகர்வதற்கான முக்கியமான தேர்வாகும். 10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |