இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..
மத்திய உள்துறை அமைச்சகம் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென அறிவுறுத்திய பிறகும் தமிழகத்தில் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.. இது பற்றி பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. சிலர் இ பாஸ் ரத்து செய்யப்பட்டு விட்டால் கொரோனா தாக்கம் அதிகமாகும் என்றும், சிலர் இ பாஸ் நடைமுறையே தொடரவேண்டும் என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.. இதனால் இ பாஸ் ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.. பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.. கடலூரில் தினமும் 300 முதல் 350 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. நோய் பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக உள்ளன என்றார்.
மேலும் அவர், இ பாஸ் இருந்தால் தானே யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும்.. அதன் மூலம் கொரோனா பாசிட்டிவ் நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இ பாஸ் ரத்து செய்யப்படாது என்பது உறுதியாகியுள்ளது.