Categories
மாநில செய்திகள்

2,500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு 12 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 32 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. 12 ஐஏஎஸ் குழுக்களுக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. கொரோனா சிகிச்சை முடிந்து 21 பேர் வீடு திரும்பியுள்ளனர். 3,371 வெண்டிலட்டர் கையிருப்பாக  உள்ளது.தமிழகத்தில் இன்னும் 342 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன. தமிழகத்தில் 738 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகத்தில் 19 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடும். மேலும் 2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |