Categories
அரசியல்

முதல்வர் எடப்பாடி…! சூப்பர்… ”குறையே கிடையாது” நம்பிக்கையுடன் மோடி …!!

கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது.

இதுவரை 543 பேர் இந்தியாவில் கொரோனாவின் பிடியில் சிக்கி உயிரை இழந்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியில் 17256 பேர் சிக்கி, 2547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழக்த்திலும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு இருந்தது. அதிக பாதிப்பை பெற்றுள்ள மஹாராஷ்டிராவிற்கு இணையாக இருந்த தமிழகம் தற்போது இந்திய அளவில் 4ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 411 குணமடைந்து வருகின்றார்கள்.

இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் இருந்து அதிகமானோரை கைப்பற்றிய மாநிலமாக தமிழகம் 2ஆம் இடத்தில் நீடிக்கின்றது. அதே வேளையில் கடந்த 3 நாட்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக நேற்று இரவு மருத்துவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 16ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பலரின் பாராட்டுகளால் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் பேசினார். நேற்று இரவு தமிழக முதல்வரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார். தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை முதல்வரும், பிரதமரிடம் விளக்கியுள்ளார். மேலும் தமிழகம் மேற்கொள்ளும் சிறப்பான சிகிச்சையை பிரதமர் பார்ட்டியுள்ளர். அதே போல தமிழக முதல்வர் அதிகமான ரேபிட் டெஸ்ட் கிட் வேணும் என்று கேட்டதற்கு, பிரதமர் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் மீது பிரதமரும், மத்திய அரசும் வைத்துள்ள நபிக்கையின் காரணமாக தான் பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி அதிகமான பரிசோதனை கருவிகள் கேட்டதும், மறுப்பு தெரிவிக்காமல் தருகின்றேன் என்று சம்மதித்துள்ளார். இது பிரதமர் மோடி தமிழக முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகின்றது. ஏனெனில் கொரோனவா நடவடிக்கைகளை தமிழக முதல்வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட கையாண்டு வருகின்றார்.

தமிழக முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கை சிறிய குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் நுட்பமாக கொரோனவை எதிர்கொண்டு தமிழக மக்களை காப்பாற்றி வருகினறது. இதன் பிரதிபலிப்புதான் தமிழகத்தில் கொரோனா பாதித்த அதிகமானோர் குணமடைந்துள்ளனர். என்ன ? நடந்தாலும் கொரோனா ஒழிக்கப்பட வேண்டும். அதில் மத்திய அரசும், பிரதமரும் தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்றால் அது நாம் அனைவருக்கும் கிடைத்த பெருமையை தீவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

Categories

Tech |