வாக்காளர் வரைவு பட்டியல் திருத்தம் செய்வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை திருத்துவதற்கு தேவையான பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நவம்பர் 16ந்தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் இரட்டை பெயர் பதிவுகளை நீக்குதல், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்கள், சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.