விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. கடந்த 9-ம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே முதல் நாளில் இருந்தே மோதல் வெடித்ததால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் வேற லெவலில் இருக்கிறது.
ஜி.பி முத்து டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜி.பி முத்துவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜிபி முத்துவுக்கு ரசிகர்களின் ஆதரவு தாராளமாக இருக்கிறது. இதனால் தனலட்சுமியை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். அதாவது சமீபத்தில் ஜிபி முத்து நான் வேணா அந்த பொண்ணு கால்ல விழுறேன் என்று கூறி கண்கலங்கி மிகவும் உருக்கமாக பேசியிருப்பார்.
இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில், தனலட்சுமியை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய twitter பக்கத்தில் ஜிபி முத்துவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தலைவரே ஜி.பி முத்து நீங்க அழாதீங்க. நாங்க உங்களுக்காக இருக்கோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை யாஷிகாவின் பதிவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
https://twitter.com/iamyashikaanand/status/1580939674608373760?s=20&t=SJ4xJXH39i0ss1EPnvN_Cg