Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய கும்பல்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

டில்லி முதலமைச்சரின் மகள் வீட்டில் இருக்கும் பழைய சோபாவை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் தந்துள்ளார். அவரிடம் வங்கி கணக்கு எண் பெற்று 34 ஆயிரம் ரூபாயைஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார் ஹர்ஷிதா. அவரை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் பணம் அனுப்புவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 7ஆம் தேதி 34 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் ஷாஜித், கபில் மற்றும் மன்வேந்த்ரா ஆகியோர் என்பது தெரியவந்தது. முதலில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு சிறிய தொகையை அனுப்பியுள்ளனர். பின்னர் ஒரு பார் கோட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்படி கூறியுள்ளனர். அதை ஸ்கேன் செய்து அவர் கணக்கில் இருந்து 24 ஆயிரம் மற்றும் 14,000 என்று இரண்டு தவணைகளாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |