Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான கோழி சுக்கா வறுவல் செய்ய தயாரா …..!!

கோழி சுக்கா வறுவல்

தேவையான பொருட்கள் :

கோழி கறி- அரை கிலோ

சின்ன வெங்காயம் -15

பூண்டு பல் -8

தக்காளி -1

மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள்- 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்

மிளகுத்தூள்- ஒன்றரை டீஸ்பூன்

சீரகம் -அரை டீஸ்பூன்

சோம்பு -அரை டீஸ்பூன்
தாளிக்க :
பட்டை – 1

கிராம்பு – 1

அன்னாசிப்பூ – 1

சோம்பு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

Image result for கோழி சுக்கா வறுவல்

செய்முறை :

கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பாதியளவு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.முதலில் மிக்ஸியில் சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், பூண்டு பல் 4, 10 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்ததை வெட்டி வைத்த கோழியில் பிசறி 15 நிமிடம் வைக்க வேண்டும்.

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து அதன் பிறகு மீதமுள்ள வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி, அதனுடன் பிசறி வைத்த கறியை போட்டு வதக்க வேண்டும்.10 நிமிடம் மிதமான தீயில் வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.கறி வெந்து தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும். அதன் பிறகு கறி வெந்தவுடன் இறக்கி விடவும்.

 

                        சுவையான கோழி சுக்கா வறுவல் ரெடி!

Categories

Tech |