கோமாவில் இருந்த வாலிபர் ஒருவர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டில் 18 வயது வாலிபர் ஒருவர் மோசமான விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்ததால் சுயநினைவிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த வாலிபரின் கல்லிரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவர் சுயநினைவுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வாலிபரின் சகோதரர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அவர் விளையாட்டாக கோமாவில் இருந்த அந்த வாலிபரிடம் “உனக்கு பிடித்த சிக்கனை நான் இன்று சாப்பிட போகிறேன்” என்று கூறியுள்ளார்.
அப்போது 62 நாட்கள் கோமாவில் இருந்த அந்த வாலிபர் சிக்கன் என்ற வார்த்தையை கேட்டதும் சுயநினைவுக்கு வந்துள்ளார். இது அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் சந்தோசம் கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் தற்போது பூரண குணமடைந்ததால், மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி கூறி விட்டு வீடு திரும்பியுள்ளார். சிக்கன் நாம் சாப்பிடும் உணவாக இருந்தாலும் கூட அது ஒரு உயிரையே காப்பாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.