Categories
விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி : விஸ்வநாதன் தலைமையிலான இந்திய அணி ….!!!

இந்த ஆண்டுக்கான  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமைலான  இந்திய அணி பங்கேற்கிறது .

கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.இதில் இந்தியா, ரஷ்யா அணிகள் கூட்டாகச் சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக  செஸ் ஒலிம்பியாட் போட்டி  ஆன்லைன் மூலமாக நடைபெற உள்ளது. இப்போட்டி இன்று முதல் (புதன்கிழமை) தொடங்கி வருகின்ற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .இதில் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்  4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன . ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்து       ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரான்ஸ்,சீனா, சுலோவேனியா, அஜர்பைஜான், மால்டோவா, எகிப்து,  சுவீடன், உட்பட பல  நாடுகள்  இடம் பெற்றுள்ளது. இதில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை  வென்ற தமிழகத்தை சேர்ந்த  விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான 12 பேர் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணியில் ஆனந்த், விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அதிபன் உட்பட பலர் இடம் பிடித்துள்ளனர். இதுகுறித்து ஆனந்த் கூறும்போது,” அனுபவம் மற்றும் இளம் வீரர்களின் சரியான கலவையாக இந்திய அணி இருக்கிறது .இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்வோம்  என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |