சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் கொரோனாவும் பரவும் என தெரிவித்துள்ள அவர், இத்தாலி மற்றும் சீனாவில் நடத்தப்பட்ட கொரோனா நோய் குறித்த ஆய்வுகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காற்றுமாசு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.