Categories
மாநில செய்திகள்

சென்னையில் நேரம் மீறி பட்டாசு வெடித்த…. 897 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்  அனுமதி அளித்தது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் ஆகியோரின் அறிவுரையின்படி உதவி கமிஷனர் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வரையறுக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னையில் 897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் 428 வழக்குகள் மற்றும் 2019 ஆம் ஆண்டில் 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு கடை வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழக அரசு விதிக்கும் பாதுகாப்பான வழிமுறைகளை பட்டாசு கடைகளில் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, தமிழக அரசின் விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியது குறித்து 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி தீபாவளி பண்டிகையான நேற்று முன் தினம்  பட்டாசு வெடித்தது குறித்து 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1200 பேர் கைது செய்யப்பட்டு உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப் பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |