2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார்.
தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் கேப்டன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என யாரும் வாய் திறக்காமல் உள்ளனர். இதனிடையே ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என சென்னை அணி தெரிவித்திருந்தது.
இதனால் ஐபிஎல் தொடரில் தோனியைப் பார்க்க தோனியின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதற்கிடையே நேற்று ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகிய நிலையில், தொடருக்கு தயாராகும் விதமாக அந்தந்த அணி நிர்வாகங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Chenn'eye Super Kings ku #WhistlePodu! #SuperGrind 🦁💛 pic.twitter.com/PPDiCvHc8a
— Chennai Super Kings (@ChennaiIPL) February 12, 2020
சென்னை அணியின் பயிற்சி முகாம்களில் இரண்டு சீசன்களாக ரசிகர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டுக்கான சென்னை அணியின் பயிற்சி முகாம் மார்ச் 10ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1ஆம் தேதியே சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து 8 மாதங்கள் தோனி ஓய்விலிருந்த நிலையில், தோனியின் வருகையை ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏற்கனவே மூன்று வாரங்களாக சென்னை அணியின் ரெய்னா, ராயுடு, முரளி விஜய் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
As the AnbuDen dates join to form a W, let's just #WhistlePodu! #Yellove2020 🦁💛 pic.twitter.com/9DLo5wpZD3
— Chennai Super Kings (@ChennaiIPL) February 15, 2020