Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முழுவதும் இனி அனுமதி இல்லை…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை பொது வெளியில் விடவும்,பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் அரசு உத்தரவை மீறி பராமரிப்பின்றி விடப்பட்ட 14 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் தொழுவத்திற்கு எடுத்துச்சென்றனர்.

அவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளை உரிமையாளர்கள் 1500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி பிடித்துச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிடிக்கப்பட்ட மாடுகளின் காதுகளில் எண்கள் பொறிக்கப்பட்ட batch அணிவிக்கப்படும். தொடர்ந்து ஒரே மாடு மீண்டும் மீண்டும் பிடிக்கப் பட்டால் அவை ப்ளூ கிராஸ் வசம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Categories

Tech |