Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தடைந்த தடுப்பூசி….. 300 பேருக்கு பரிசோதனை…. வெளியான தகவல்…!!

இந்தியாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கான தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளது. 

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால்  பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான வேலைகளை உலக நாடுகள் மும்முரமாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவை  தடுக்க ஆக்ஸ்போர்ட் பல்கலை கண்டுபிடித்துள்ள தடுப்பூசி பூனேவிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளது. இந்த தடுப்பூசியை  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சுமார் 300 பேருக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |