Categories
சென்னை மாநில செய்திகள்

அங்க சுற்றி…. இங்க சுற்றி…. இறுதியில் CM வீட்டிற்கே வந்த கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் காவலர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் வீட்டில் அவரது பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரியான பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வர, அவருடன் பணிபுரிந்த மற்ற காவலர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்ற அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |