Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் வலம்வரும் சிறுத்தை…. “விவசாயம் பண்ண முடியல” புலம்பும் மக்கள்…!!

ஊருக்குள் சிறுத்தை வருவதால் அச்சத்துடன் விவசாயம் செய்ய முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலியில் வடக்கு விஜயநாராயணம் என்னும் பகுதியில் சிறுத்தை ஒன்று தனது குட்டியுடன் நடமாடுவதை அப்பகுதியினர் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு தோட்டத்தில் தோட்டங்களில் நள்ளிரவில் சிறுத்தை புகுந்து அங்கிருந்த மாடுகள் மற்றும் ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வடக்கு விஜயநாராயணம் பகுதியில் சிறுத்தை ஒன்று 12 கன்று குட்டிகளை கடித்துக் கொன்றது.

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் வீரணாஞ்சேரி தோட்டத்தில் 22 ஆடுகளையும், பெரியகுளம் குட்டத்தட்டப்பாறை தோட்டத்தில் இரண்டு ஆடுகளையும் ஒரு பசுவின் கன்று குட்டியையும் சிறுத்தை கடித்துக்கொண்றுள்ளது. இதனால் மூன்று இடங்களில் அப்பகுதியில் வனத்துறையினர் சிசிடிவி கேமரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் சிறுத்தை சிக்கவில்லை.

இந்நிலையில் பரப்பாடி அருகே உள்ள சவளக்காரன் குளத்தில் வசிக்கும் களக்குடி என்பவருடைய மகன் சுரேஷ்க்கு சொந்தமான தோட்டம் வடக்கு விஜயநகரத்தின் அருகே வடிவால்புரம் பகுதியில் உள்ளது. சுரேஷ் இதில் ஆடுகளை வளர்க்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானார். பின் நெல்லை வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறுத்தையின் கால் தடங்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து வடக்கு விஜயநாராயணம் பகுதியில் இன்னும் 20 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் இரண்டு இடங்களில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டுகள் அமைக்கவும் ஏற்பாடு செய்தார்கள். இறந்துபோன ஆடுகளை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து புதைத்தார்கள். சிறுத்தையின் அட்டகாசத்தால் தவிக்கும் பொதுமக்கள் தோட்டங்களுக்கு செல்ல மிகவும் பயப்படுகின்றனர். இதனால் விவசாயம் செய்ய இடையூறாக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Categories

Tech |