ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார்,
பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் இயந்திரத்தை வாங்கி தருவதாக கூறி வியாபாரிகளை திருப்பதி வரவழைத்து 25 லட்சம் ரூபாய் வரை ஒரு கும்பல் பணத்தை பறித்து மோசடி செய்துள்ளதாகவும், இதனால் ஏமாந்த வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன்பின் மோசடி கும்பலை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவர், இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவர்கள் பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்களை தேடி வருவதாகவும் கூறினார். தற்போது பிடிபட்ட நபர்களிடமிருந்து 59 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.