தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது வேறு மாவட்ட தேர்வு மையத்தை தேர்வு செய்வதற்கான காரணத்தை குறிப்பிடும் புதிய விதிமுறை அறிமுகப்பட்டு உள்ளது.
69 குரூப் 4 பணியிடங்களுக்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான விவரங்களில் தேர்வர்கள் தங்களது மாவட்டத்தை தவிர வேறு மாவட்டத்தை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் ராமேஸ்வரம் கீழக்கரை தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்று இருப்பதாக புகார் எழுந்தத நிலையில், அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கூறப்பட்டது. இதுகுறித்த விசாரணையை டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் நிலையில், குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பத்தை இந்த புதிய விதி முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.