தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால் 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 70,017 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் வீதம் 57.90 %ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்புக்கு எந்த மாவட்டமும் தப்பவில்லை.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 253 பேரும், செங்கல்பட்டில் 220 பேரும், காஞ்சிபுரத்தில் 183 பேரும், திருவள்ளூரில் 177 பேரும் தேனியில் 119 பேரும், தூத்துக்குடியில் 109 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் 401 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். மாவட்டத்தில் 19.1ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.