Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய நோயை தடுக்கும்….. இதுவா…? ஆச்சரியப்படுவீங்க…!!

காடுகளிலும் வறட்சி நிறைந்த பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி பற்றி பலரும் அறிந்ததில்லை. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உயர் தரமான நார்ச்சத்துக்கள் நிறைந்தது இது. இந்தச் சப்பாத்தி கள்ளியில்  விட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. சப்பாத்திக்கள்ளி மூலம் தயார் செய்யும் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.

சப்பாத்திக்கள்ளி ஜூஸ்

தேவையான பொருட்கள்

சப்பாத்திகள்ளி

தேங்காய் தண்ணீர்

ஆரஞ்சு ஜூஸ்

எலுமிச்சை சாறு

செய்முறை

  1. சப்பாத்தி கள்ளியை எடுத்து அதில் இருக்கும் முட்களை எடுத்து விடவும்.
  2. அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  3. தண்ணீர் கொதித்ததும் சப்பாத்தி கள்ளியை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
  4. கொதித்ததும் சப்பாத்தி கள்ளியை எடுத்து ஆற வைக்கவும்.
  5. நன்றாக ஆறியதும் அதன் தோலை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  6. பின்னர் அதனுடன் தேங்காய் தண்ணீர், எலுமிச்சைச்சாறு, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி  சாறு எடுத்துக் கொள்ளவும்.
  7. இப்போது சப்பாத்திக்கள்ளி ஜூஸ் தயார்.

நன்மைகள்

  • நம் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து இந்தப் ஜூசை அருந்துவதால் கிடைக்கப்பெறுகிறது.
  • தேவையற்ற நேரத்தில் உணவு அருந்துவதையும் அதிகமான உணவு சாப்பிடும் உணர்வையும் இது தடுக்கிறது.
  • உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்க உதவி புரிகிறது.
  • இதயநோய் ஏற்படாமல் தடுத்து துணை செய்கிறது.
  • செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி உதவி புரிகிறது.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்கிறது.

Categories

Tech |