ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ட்ரம்பின் பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் பல மாற்றங்கள் இருக்கப்போகின்றன. ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்கா அதிபராக பதவியேற்க இருக்கிறார். அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் நபர் ஜோ பைடன். வழக்கமாக பதவியேற்பு நாளன்று காலையில் பதவி முடியும் அதிபர் புதிதாக பதவியேற்கும் அதிபருக்கு விருந்து அளிப்பார்.
பின்னர் இவர்கள் இணைந்து சென்று பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பர். 2017 ஆம் ஆண்டு ஒபாமா ட்ரம்பிற்கு விருந்தளித்தார். ஆனால் இம்முறை அவ்வாறு நடைபெற சாத்தியமில்லை. ஏனெனில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்து விட்டார். புதன் கிழமை காலையிலேயே அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 152 ஆண்டுகளில் பதவிக்காலம் முடியும் அதிபர் புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருப்பது இதுவே முதன் முறை.
வழக்கமாக பதவியேற்பு நிகழ்ச்சியில் போது வாஷிங்டன் நகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும். நகரம் முழுவதும் அதிபரின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். ஜனவரி 6ஆம் தேதி நடந்ததை போன்ற வன்முறை மீண்டும் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு வளையத்திற்குள் வாஷிங்டன் நகரம் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பிங்கிலிண்டோன் ஆகியவர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் லேடி காகா தேசிய கீதம் பட இருக்கிறார். ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 1940 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக பதவியேற்ப்பு விழாவின் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நடன நிகழ்ச்சி நடைபெறும் வால்டரி வாஷின்டோன் மையம் கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
ஜோ பைடனுக்குஉச்ச நீதிமன்ற நீதிபதி சார்ஜ் பிராவட்சன் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு நீதிபதி சோடா மேயர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் பிற இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் இம்முறை ஆன்லைனில் நடைபெறும் என்றும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.