தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்போது அமைச்சர் சக்கரபாணியும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதுதான் ஆசை என்று கூறி வருகிறார். இந்நிலையில் உதயநிதியுடன் சேர்த்து திமுக கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும் இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
இவர்களின் மூலம் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வரவேண்டும் என திமுக கட்சியை சேர்ந்த பலரும் கூறிவரும் நிலையில் துர்கா ஸ்டாலினும் தன்னுடைய மகனை எப்படியாவது அமைச்சராக்கி பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு தான் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.