Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஆட்சி மாற்றம்” முதலவர் பதவியை இழக்கும் சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திர மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்ற வாக்குபதிவில் YSR காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகுத்து வருகின்றது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வந்த முன்னிலை நிலவரத்தின் படி ஆந்திர மாநிலத்தின் YSR  காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே போல ஆளுகின்ற தெலுங்கு தேசம் 29 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |