தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருப்பதால், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, அதை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமெனவும் , கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.